யாரும் எதிர்பாக்காத வகையில் தோனி எடுத்த அதிரடி முடிவு. இதெல்லாம் தேவையா ? – ஷாக்கிங் செலக்ஷன்

Dhoni
- Advertisement -

நடப்பு 14 ஆவது ஐபிஎல் தொடரின் 12வது லீக் மேட்சில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்னும் சற்று நேரத்தில் மோதவுள்ளன. இந்த போட்டியில் சென்னை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி டாப் ஆர்டரில் சொதப்பி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

cskvsrr

- Advertisement -

அதே போன்று பவுலிங்கில் பிராவோவுக்கு பதிலாக லுங்கி நெகிடி அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த டாசுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன் பிறகு சென்னை அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய தோனி இந்த போட்டியில் நாங்கள் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை என்றும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி விளையாடும் என்பதை உறுதி செய்தார்.

தோனி எடுத்துள்ள இந்த முடிவு எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என்று தெரியவில்லை ஏனெனில் கடந்த சில போட்டிகளாகவே சொதப்பி வரும் ருத்துராஜிக்கு பதிலாக நல்ல டச்சில் இருக்கும் ராபின் உத்தப்பாவை அணிக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Ruturaj

அதேபோன்று 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீச கூடிய பவுலர்கள் இல்லை என்பதாலும் அதன் காரணமாக நெகிடியை அணியில் எடுத்து வந்திருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இதன் காரணமாக தோனி தற்போது எடுத்துள்ள இந்த முடிவில் எந்த அளவிற்கு சென்னை அணிக்கு உதவும் என்று தெரியாமல் உள்ளது. மேலும் தோனி எடுத்துள்ள இந்த முடிவு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

மும்பை மைதானம் பேட்டிங் ஆடுகளம் என்பதால் சேசிங்கிற்கு பெரிய அளவில் இதுவரை கைகொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தோனி பிளேயிங் லெவனை மாற்றாமல் சென்றுள்ளது சற்று தவறாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த போட்டி ரசிகர்களுக்கு ஒரு முழு திருப்தி அளிக்கும் போட்டியாக நடைபெறும் என நம்பலாம்.

Advertisement