அடுத்த 2 மாதம் நான் இதற்காக ஓய்வு எடுத்துக்கொள்ள போகிறேன் – தோனி திடீர் அறிவிப்பு

msdhoni
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து அவரது ஓய்வு குறித்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.

Dhoni

- Advertisement -

உலகக் கோப்பை தொடர் முடிந்து ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பினையும் கொடுக்கவில்லை. மேலும் இந்திய அணியில் தோனி தற்போது தேர்வாவது சந்தேகமாக உள்ளது. மேலும் பி.சி.சி.ஐ அவருக்கு ஓய்வு முடிவினை எடுக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ கூறிவந்த நிலையில் தானே முன்வந்து தோனி இரண்டு மாத ஓய்வினை பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார். அதன்படி மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும், எனக்கு இரண்டு மாதங்கள் ஓய்வு வேண்டும் என்றும் தோனி பி.சி.சி யிடம் கேட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni-1

இந்த இரண்டு மாத ஓய்வில் நான் பாரா மிலிட்டரியில் படைப்பிரிவில் சேரப் போவதாகவும் அதற்காக இந்த இரண்டு மாத கால அவகாசத்தை பயன்படுத்தப் போவதாகவும் தோனி தெரிவித்ததாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தோனி பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சி பெற்றதும் ஓய்வுக்குப் பிறகு அது அந்தப் பிரிவில் வேலை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தோனி தற்போது இரண்டு மாத ஓய்வினை கேட்டுள்ளார்.

Advertisement