ரசிகர்களிடம் கண்கலங்கிய தோணி !

MS1
- Advertisement -

இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மீண்டும் இந்த ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது ரசிகர்கள் மத்தியில் கண்கலங்கினார்.

dhoni

- Advertisement -

பொதுவாக எதற்குமே கலங்காத பெரியதாக அலட்டிக்கொள்ளாது அமைதியாகவே இருந்து தன்னுடைய நிதானமாக வழிநடத்தலில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்பவர் தோனி.அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் உணர்ச்சிவசப்படுவதை காண்பதே அரிதிலும் அரிது. அதிலும் அவர் கண்கலங்கி பேசிவதெல்லாம் இதுதான் முதல் முறை எனலாம்.

இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் சார்பில் உணர்ச்சிவசப்பட்டு அந்த நிகழ்வில் பேசிய தோனி”முன்னர் நடந்து முடிந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும் போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது என்று பேசும் போதே தோனியின் நா தழுதழுத்தது.கண்ணீரை அடக்கி பேச முயற்சித்து மீண்டும் சிலநொடிகள் தடுமாறிய தோனி பின்னர் சுதாரித்துக்கொண்டு “நாங்கள் மீண்டும் ஐபிஎல்-இல் வந்துவிட்டோம். இனி என்ன செய்யப் போகிறோம் என்பது தான் முக்கியம். இரண்டாண்டுளுக்கு முன்னர் இருந்த அதே அணியை மீண்டும் உருவாக்கி கொடுத்த அணி நிர்வாகத்திற்கு நன்றி” என்று பேசினார்.

smith

சென்னை அணிக்கு இரண்டாடுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் தோனி புனே அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.ஆனால் புனே அணியோ தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கிவிட்டு ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்து தோனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இரண்டாண்டு தடை முடிவடைந்தவுடன் தோனி மீண்டும் தற்போது சென்னை அணிக்கு கேப்டனாகியுள்ளது அவர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement