நீ 100% நல்லா ஆடுன. ஆனா இது உனக்கான நாள் இல்ல – இளம்வீரரை முதுகில் தட்டி கொடுத்து பாராட்டிய தோனி

Tripathi
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் கோடிகளில் தேர்வு செய்யப்பட்டு ஆச்சரியப்பட்ட வைத்தனர். அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடும் சில வீரர்கள் கோடிகளில் சென்றாலும் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களும் நல்ல தொகைக்கு ஏலம் போகினர்.

tripathi 2

- Advertisement -

அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் 30 வயதான ராகுல் திரிப்பாதி கடந்த சில சீசன்களாகவே கொல்கத்தா அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரின்போது தோனியுடன் ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ராகுல் திரிபாதி தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எப்போதுமே அமைதியாக இருக்கக் கூடிய ஒரு கேப்டன். தனது அணியில் இருக்கும் வீரர்களை எப்போதும் இளைய சகோதரர்கள் போல நடத்தி அணியின் உயர்வு தாழ்வுகளை சரியாக உணர்ந்து வழிநடத்துகிறார்.

tripathi 1

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது நாங்கள் சென்னை அணியை துரத்தி விளையாடுகையில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்து இருந்தோம். ஆனால் இறுதியில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வி அடைந்தோம்.

- Advertisement -

அந்த போட்டியின் போது நான் முழுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனாலும் தொடையில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் வந்த என்னால் ஓட முடியவில்லை. விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் மிகவும் சிரமப்பட்டேன். இருப்பினும் நான் ஆட்டமிழந்து வெளியேறியபோது தோனி என்னிடம் வந்து முதுகில் தட்டிக் கொடுத்தார். அதோடு அப்போது அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : இந்த மேட்ச்லையும் அவரை சேர்க்கலயா? என்ன தான் நடக்குது இந்திய அணியில் – ரசிகர்கள் கொந்தளிப்பு

“இது உனக்கான நாள் அல்ல, ஆனாலும் நீ நூறு சதவீத செயல்பாட்டை இந்த போட்டியில் கொடுத்தாய்”, வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அவரின் இந்த குணமும் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என ராகுல் திரிப்பாதி தோனி உடனான நினைவு குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement