
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் முதல் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணியானது 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதோடு ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று துவங்கியுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் இந்த ஒன்பதாவது இடத்தில் இருந்தே இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி இன்றைய கடைசி ஆட்டத்தில் கேப்டனாக விளையாடுவதால் டாஸின் போது நிச்சயம் அடுத்த ஆண்டிற்கான திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
அந்தவகையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டி துவங்கும்போது டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார். அதன் பின்னர் அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசியதும் வர்ணனையாளர் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று அனைவரும் எதிர்பார்த்த அந்த கேள்வியை தோனியை பார்த்தபடி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த தோனி : நிச்சயம் நான் அடுத்த ஆண்டு விளையாடுவேன். அதற்கு சாதாரண ஒரு காரணம் இருக்கிறது. சென்னை ரசிகர்களுக்காக நான் அவர்களுக்கு முன் விளையாட வில்லை என்றால் அது அழகல்ல. சென்னையில் நான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடி நன்றி சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
அதன் காரணமாக கட்டாயம் நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சென்னை மட்டுமின்றி இந்தியாவில் எங்கு விளையாடினாலும் நிறைய அன்பு எங்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும் சிஎஸ்கே ரசிகர்களுக்காக நான் அடுத்த ஆண்டு விளையாட வேண்டியது அவசியம்.
கடந்த சில ஆண்டுகளாகவே நான் விளையாடுவேனா? மாட்டேனா? என்பது குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நிச்சயம் நான் அடுத்த ஆண்டு விளையாடுவேன் அதோடு சென்னை அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்றும் தோனி உறுதி செய்துள்ளதால் தற்போது சென்னை ரசிகர்களுக்கு இது நற்செய்தியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : ஏழை குடும்பம், இவ்ளோ பெரிய பணத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை – நெஞ்சை தொடும் இளம் இந்திய வீரரின் பின்னணி கதை
தற்போது 40 வயதைத் தொட்டுவிட்ட தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் 41 வயதை தொட்டு விடுவார் என்பதால் இந்த போட்டியே அவரது கடைசி போட்டியாக இருக்கும் என்று அனைவரும் அச்சப்பட்ட வேளையில் அடுத்த ஆண்டு விளையாடுவதை தோனி இப்போதே உறுதி செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.