தோனி தேர்ந்தெடுத்திருக்கும் விக்டர் படை எவ்வளவு ஆபத்தானது தெரியுமா ? – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இரண்டு மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி அடுத்த 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தோனி தேர்ந்தெடுக்கும் இந்த விக்டர் பிரிவு குறித்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இம்மாதம் 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 106 தீவிரவாதிகள் தடுப்பு ராணுவ பட்டாலியன் படையினருடன் இணைந்து விக்டர் படையுடன் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

Dhoni 2

ஜம்மு-காஷ்மீரில் கிளர்ச்சி ஏற்பட்ட பின் உருவான அமைப்பு தான் ராஷ்டிரிய ரைபிள்ஸ் அல்லது ஆர்.ஆர். இந்த பிரிவு விஸ்வநாத் பிரதாப் சிங் என்பவர் மூலம் அரசாங்கத்தின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டது. இது இந்திய ராணுவத்தின் பிற பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்ட ராணுவ வீரர்களால் உருவானது. இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரும் ஆபத்து வாய்ந்த காஷ்மீர் பகுதிகளில் இந்த படைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பகுதிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

Dhoni 1

ரோமியோ படை – ராஜோரி மற்றும் பூஞ்சில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

டெல்டா படை – தோடாவில் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

விக்டர் படை – அனந்த்நாக், புல்வாமா, ஷோபியன், குல்கம் மற்றும் புட்காம் ஆகிய இடங்களில்
செயல்பட்டு வருகிறது.

கிலோ படை – குப்வாரா, பாரமுல்லா மற்றும் ஸ்ரீநகரில் செயல்பட்டு வருகிறது.

சீருடை படை – உதம்பூர் மற்றும் பானிஹாலில் செயல்பட்டு வருகிறது.

Dhoni

இதில் தோனி தேர்ந்தெடுத்திருக்கும் படையான விக்டர் படை சமீபத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளான புல்வாமா பகுதியிலும் செயல்பட்டு வருவதால் தோனி அதிபயங்கரமான இடத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement