இந்த ஐபிஎல் சீசனில் தோணி இறங்கும் பேட்டிங் வரிசையில் மாற்றம் ?

- Advertisement -

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி பேட்டிங் வரிசையில் ஆறாவது வீரராகவோ அல்லது ஏழாவது வீரராகவோ களமிறங்கி விளையாடுவார்.சமீபகாலங்களாக கடைசி வரிசையில் இறங்கி விளையாடுவதால் பெரிதாக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திட முடியாத காரணத்தினால் இந்தாண்டு முதல் ஐபிஎல்-இல் தான் வழக்கமாக இறங்கி ஆடிடும் வரிசையிலிருந்து மாற்றி ஆட முடிவுசெய்துள்ளாராம்.
MS

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.
dhoni

ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் வீரர்கள் தற்போது இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை அணி விளையாடவுள்ளதால் எப்படியும் இந்தமுறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் களம் இறங்குகின்றது.

சென்னை அணியின் பயிற்சியாளரான பிளெம்மிங் கடைசி நேரத்தில் அணியில் சில மாற்றங்களை செய்யவுள்ளாராம்.சென்னை அணியை பொறுத்தவரையிலும் பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி வலுவாகவே உள்ளது.வழக்கமாக தோனி களமிறங்கும் 6வது அல்லது 7வது வரிசையில் இனிமேல் விளையாடப்போவது இல்லையாம்.அதற்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து 4வது வீரராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறாராம் சென்னை அணியின் கேப்டன் தோனி.

Advertisement