6 வீரர்களுடன் அமர்க்களமாக சென்னை வந்து சேர்ந்த தல தோனி. அதுவும் மஞ்ச டீசர்ட் போட்டு – வைரலாகும் புகைப்படம்

Dhoni-1

பல்வேறு இன்னல்களை கடந்து பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் பயணத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று முதல் 20ம் தேதி வரை 5 நாட்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

ipl

மேலும் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணைக்கேப்டன் ரெய்னா,தீபக் சாகர், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, மோனு குமார் ஆகிய 6 வீரர்களும் விமானத்தில் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த சி.எஸ்.கே வீரர்கள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை வந்தது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து வந்த தோனியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் வீரர்களின் வருகையை முன்னிட்டு உற்சாகமடைந்துள்ளனர். தமிழக வீரரான பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த ஐந்து நாள் பயிற்சிக்கு பிறகு சென்னை அணி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கும் என்று கூறப்படுகிறது. தோனியின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.#

- Advertisement -

ஏற்கனவே தனது சொந்த வேலை காரணமாக பயிற்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிய ஜடேஜா நேற்று சென்னை வரவில்லை மேலும் அவர் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.