கடைசி செக்கண்டில் சரியாக டி.ஆர்.எஸ் அப்பீல் செய்த தல தோனி – வீடியோ

Dhoni
- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் சென்னை அணி வீரரான இம்ரான் தாஹீர் வீசிய பந்தை எதிர்கொண்ட பெங்களூரு அணி வீரர் கேட்ச் ஆனார், ஆனால், அதனை அவுட் கொடுக்க மறுத்த அம்பயர் அதனை எதிர்த்து கடைசி செக்கண்டில் சென்னை அணி கேப்டன் தோனி அப்பீல் செய்தார். அந்த அப்பீலில் பெங்களூரு வீரர் அவுட் என்று தெரிந்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தல தோனியின் இந்த சரியான கணிப்பு விக்கெட்டை தேடித்தந்தது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தோனியின் இதுபோன்ற பல சரியான அப்பீல்களை நாம் பலமுறை கண்டதுண்டு. இருப்பினும், நேற்றைய போட்டியில் தாஹீர் தோனியிடம் அப்பீலை கெடுக்குமாறு கேட்டுக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு 12ஆவது ஐ.பி.எல் தொடர் துவங்கியது. முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு, ஆடிய சென்னை அணி எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

Advertisement