ஓய்வுபெற்ற ராயுடுவுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் யோகி பாபுவா? – தல தோனி அளித்த கலகலப்பான பதில் இதோ

Dhoni-and-Yogi-Babu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மாபெரும் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் துவங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக தனது பயணத்தை துவங்கினார். அப்போதிலிருந்தே தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட ஆரம்பித்த தோனி இன்று ராக் ஸ்டாராகவும், தல தோனியாகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

LGM

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் கிரிக்கெட்டிலும் சரி தனது சிறப்பான கேப்டன்சியின் மூலமும் தனது வழிகாட்டுதலின் மூலமும், தனிப்பட்ட குணாதிசயங்களின் மூலமும் பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள தோனி பலகோடி இதயங்களை கொள்ளை கொண்டு தமிழகத்தின் செல்லப்பிள்ளையாகவே மாறினார். இந்நிலையில் தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை தமிழில் எடுத்தும் முடித்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து “எல் ஜி எம்” என்கிற படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சென்னை அணியில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக யோகி பாபுவிற்கு சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்று ஆங்கர் பாவனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி : யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது எனக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான் யோகி பாபு சரியான முறையில் கால்சீட் கொடுக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் அவர் விளையாடும் அளவிற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தால் நிர்வாகத்திடம் நான் பேசத் தயார் என தோனி கலகலப்பான பதிலளித்து இருந்தார்.

இதையும் படிங்க : தனியாளா ஜெயிக்க முடியுமா? தங்கமான அவர விமர்சிக்காம பிசிசிஐ சேர்ந்து சப்போர்ட் கொடுக்கனும் – கவாஸ்கருக்கு ஹர்பஜன் பதிலடி

அதோடு : பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை நோக்கி பந்து வீசமாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கியே பந்து வீசுவார்கள் அதையும் அவர் கையாள முடியுமா? அதற்கான திறன் இருக்கிறதா என்று யோகி பாபுவே முடிவு செய்யட்டும் என்று தோனி கலகலப்பாக பேசினார்.

Advertisement