தல தோனி மற்றும் கிங் கோலி நடித்த ஐ.பி.எல் முதல் போட்டியின் விளம்பரம் – தீயாய் பரவும் வீடியோ

MS-and-VK
- Advertisement -

இந்த வருடம் 12ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சென்னையில் வலைப்பயிற்சியினை துவங்கியது.

staripl

- Advertisement -

சென்னை அணி பயிற்சி செய்யும் சில விடீயோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் கோலி மற்றும் கோலி ஆகியோர் நடித்த இன்றைய ஆண்டில் முதல் விளம்பரம் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. வெளியான சிலமணி நேரத்திலேயே இணையத்தில் இந்த வீடியோ ஹிட் அடிக்க துவங்கியுள்ளது.

இந்த விளம்பரத்தில் கோலி மற்றும் தோனி பேசிக்கொள்ளும்படியும் இரு அணி அணிகளுக்கு இடையேயான போட்டி தேதி குறித்தும் மேலும், போட்டிக்கு லேட்டாக வராதே என்று தோனி எதிர் அணியின் கேப்டன் கோலியிடம் கூறுவது போலவும் இந்த வீடியோ உள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இன்னும் 8 நாட்களில் துவங்க உள்ள இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இன்றிலிருந்தே துவங்கியது என்று கூட கூறலாம். மேலும், முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை 16ஆம் தேதி காலை முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement