தோனி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஜோடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த வரலாற்று சாதனை – இது தெரியுமா ?

dhoni

கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ சாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பல சாதனைகள் ரசிகர்கள் அறியும்படி இருந்தாலும் சில அரிதான சாதனைகள் யாரும் அறியாத வண்ணம் கிரிக்கெட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த ஒரு அரியவகை ரெக்கார்டு ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர் அந்த விவரத்தை தான் இந்த தொகுப்பில் நாங்கள் வழங்கி உள்ளோம்.

abd dhoni

அதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது மூன்றாவது நாள் ஆட்ட நேரத்தில் இந்திய அணி நல்ல வலுவான நிலையில் ரன்களை குவித்து கொண்டு வந்தது. அப்போது இடைவேளைக்கு முந்தைய ஒரு ஓவரை விக்கெட் கீப்பர் ஆன டிவில்லியர்ஸ் வீசினார்.

- Advertisement -

ஏனெனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் விக்கெட் எடுக்காத நிலையில் புதிதாக ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசினால் விக்கெட் விழும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக கீப்பர் பொறுப்பை அசீம் அம்லாவிடம் கொடுத்துவிட்டு அந்த ஓவரை டிவில்லியர்ஸ் வீசினார். ஆனாலும் அந்த ஓவரில் விக்கெட் எதுவும் விழவில்லை. அதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி போட்டி நாளுக்கான நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் பந்துவீச முன்வந்தார்.

abd bowling

அப்போது தனது விக்கெட் கீப்பர் பணியை விராட் கோலியிடம் வழங்கிய தோனி 2 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்தார். இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்களும் ஒரே போட்டியின் போது பந்து வீசியது கிடையாது. இதனால் ஒரு டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய 2 விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை தோனி மற்றும் ஏபிடி ஆகியோரது ஜோடி செய்துள்ளது. இந்த சுவாரசியமான தகவல் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனாலேயே இதனை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

dhoni bowling

நீங்களும் தோனி, டிவில்லியர்ஸின் ரசிகராக இருந்தால் இதனை பகிருங்கள். இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் சிறப்பாக விளையாடியதன் காரணமாக ஐந்தாவது நாளில் இப்போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement