மீண்டும் நல்ல வீரரை அணியில் இருந்து வெளியேற்றிய தோனி – அதிருப்தியில் ரசிகர்கள்

Dhoni-1

ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் போட்டி இன்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

srhvscsk

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடி வரும் சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை அடித்துள்ளது. இந்நிலையில் போடப்பட்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த தோனி அணியின் ஒரு மாற்றமாக ஜெகதீசனை வெளியில் அனுப்பி அவருக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை அணியில் இணைந்துள்ளார்.

அவரின் இந்த முடிவு சென்னை ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த போட்டியில் சென்னை அணி தோற்ற போதிலும் அறிமுக வீரராக களமிறங்கிய ஜெகதீசன் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் 30 பிளஸ் ஸ்கோரை அடித்தார். அதனால் அவர் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவரை நீக்கி அணியில் இருந்து தோனி நீக்கியுள்ளார்.

Jagadeesan

மேலும் ஏற்கனவே அணியில் 6 பந்துவீச்சாளர்கள் இருக்க ஏழாவது பந்துவீச்சாளராக சாவ்லாவை இணைத்தது தவறான முடிவாக அமைய வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும் துபாய் போன்ற பெரிய மைதானங்களில் ஒரு பேட்ஸ்மேனை அதிகமாக எடுத்து விளையாடலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த போட்டியிலும் சென்னை அணி தோல்வி அடைந்தால் பிளே ஆப் வாய்ப்பு முற்றிலும் மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.