இந்திய அணியில் தேர்வாகும் நேரம் தூரமில்லை. கொஞ்சம் பொறுமையா இரு – மும்பை வீரருக்கு அட்வைஸ் கொடுத்த தோனி

Dhoni
- Advertisement -

13வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இது அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பையாகும். இந்த அணியில் சிறப்பம்சம் என்னவென்றால் இளம் வீரர்கள் பலர் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் ஆகியோர் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு ஆடுகிறார்கள். இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷன் கிஷன் 12 போட்டிகளில் விளையாடிய 483 ரன் அடித்திருந்தார்.

mi

- Advertisement -

இதன் சராசரி 53 ஆக ஸ்ட்ரைக் ரேட் 144, அதிலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் விளாசிய வீரர் இவர்தான். மொத்தம் 30 சிக்சர்கள் அடித்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த இவர், குறிப்பாக இந்த வருடம் தனது பெரும் பங்களிப்பை அளித்து இருந்தார். ஆனாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

விக்கெட் கீப்பராக இருப்பதால் ரிஷப் பந்த், கே.எல் ராகுல் போன்றோர் அந்த இடத்தை பிடித்திருக்கின்றனர். மேலும் இவருடன் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட், கலீல் அஹ்மது போன்ற வீரர்கள் எல்லாம் சீனியர் அணியில் ஆகி விட்டனர். இவருக்கு இன்னும் அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

Ishan kishan

இவர் உண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தல தோனியின் அணியில் சையது முஷ்டாக் அலி 20 தொடரில் விளையாடி இருக்கிறார். அப்போது இவருக்கு பல அறிவுரைகளை கொடுத்திருக்கிறார் தோனி.

Ishan-kishan

அதில் எப்போதும் நமக்கு பொறுமை முக்கியம், குறிப்பாக இந்திய அணியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் . உங்களுக்கான நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோனி இளம் வீரருக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அறிவுரை கூறியிருக்கிறார்.

Advertisement