Shikhar Dhawan : ஆஸ்திரேலிய அணியை டிக் செய்து விட்டோம். இனிமே எல்லாருக்கும் இதேதான் – தவான் பேட்டி

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும்

Dhawan
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ind vs aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Bhuvi

போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ஷிகர் தவான் கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்றாகும். நாங்கள் ஒரு அணியாக அனைவரும் செய்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம். இந்த ஆட்டநாயகன் விருதை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியின் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம்.

dhawan 1

எங்கள் அணி ஒரு நல்ல பீல்டிங் அணி மேலும் பவுலிங்கும் தற்போது சிறப்பாக உள்ளது. நாங்கள் வெற்றிக்கான அத்தனை கட்டங்களையும் இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிக் செய்து விட்டோம். இனிவரும் போட்டிகளிலும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிக்கான கட்டங்களை டிக் செய்து கோப்பையை கைப்பற்றும் என்று தவான் கூறினார்.

Advertisement