சன் ரைசர்ஸ் அணியை விட எனக்கு டெல்லி அணி இதற்காக தான் பிடிக்கும் மனம் திறந்த – ஷிகார் தவான்

Dhawan
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. மற்ற அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட உள்ளன. இந்நிலையில் அனைத்து அணிகளும் வலைப் பயிற்சியில் தீவிரமாக உள்ளன. சென்ற ஆண்டு சான் ரைசர்ஸ் அணியில் விளையாடிய தவான் இந்த ஆண்டு தந்து சொந்த ஊர் அணியான டெல்லி அணியில் ஆடுகிறார்.

dhawan1

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவு எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருக்கும் என்று நம்பலாம். இந்நிலையில் டெல்லி அணியின் துவக்க வீரர் ஆன ஷிகார் தவான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் முதல் சீசனில் டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடினேன். பிறகு, வெவ்வேறு அணிக்காக இத்தனை ஆண்டுகள் ஆடி விட்டேன்.தற்போது மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஏனெனில் சொந்த ஊருக்காக ஆடும் மகிழ்ச்சியே தனிதான் அதுமட்டுமில்லாமல் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் நான் சிறுவயது முதல் விளையாடி எனக்கு பரிச்சயமான ஒன்றாகும். எனவே, இந்த மைதானத்தில் என்னால் சிறப்பாக ரன்களை குவிக்க முடியும்.மேலும் எனது சொந்த அணிக்காக ஆடும் போது என்னுடைய முழு திறனையும் நான் வெளிப்படுத்துவேன்.

dhawan

டெல்லி அணி டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் இருந்து தற்போது டெல்லி கேப்பிடல் என்று பெயர் மாற்றம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதிரடிவீரர்கள் பலர் தற்போது டெல்லி அணியில் உள்ளனர். மேலும், பண்ட் மற்றும் ஐயர் போன்ற இளம் வீரர்களும் டெல்லி அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement