போட்டியை அவங்க 2 பேர் முடிச்சி கொடுப்பாங்கனு நெனச்சேன். ஆனா என்னென்னமோ நடந்துபோச்சி – தவான் பேட்டி

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1 க்கு 0 என்ற கணக்கில் முதலிடத்தில் இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

deepak 2

- Advertisement -

நேற்றைய போட்டியில் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை விரட்டிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் கணிசமாக ரன் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். சூரியகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவி மற்றும் தீபக் சாகர் ஆகியோர் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் :

sky

இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை இளம் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இது போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு பேட்டிங் செய்வது என்பதை இந்த போட்டியின் மூலம் அறிந்திருப்பார்கள். நான் இந்த போட்டியில் மனிஷ் பாண்டே மற்றும் சூரிய குமார் ஆகியோர் ஆடிய விதத்தை பார்க்கும் போது அவர்கள் நிச்சயம் எங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

deepak

ஆனால் அந்த நேரத்தில் பாண்டே ஆட்டம் இழந்ததும் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்தேன். அதன் பிறகு க்ருனால் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதியில் தீபக் சாகர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் நம்பமுடியாத வகையில் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்கள் என்று தவான் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement