டெல்லி அணி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இவர்தான் காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இடையே ஐபிஎல் போட்டி ஒன்று நடைபெற்றது.
எப்போதும் போல் டெல்லி அணி அந்த போட்டியிலும் டெல்லி அணி அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களின் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை விளையாடி கையிலிருந்த வெற்றி வாய்ப்பை தவறவிட்டு இறுதியாக 148 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியின்போது டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் விழுந்து காயம் அடைந்து விட்டார். பந்தை டைவ் அடித்து பிடிக்கச் சென்ற போது இவருக்கு காயம் ஆகிவிட்டது தோள்பட்டையில் காயம் ஆனதால் கடுமையான வலியில் துடித்தார். இதன் காரணமாக உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார்.
போட்டிக்குப் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து பேசிய ஷிகர் தவான் கூறுகையில் : அவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தோள்பட்டையில் சிறிதளவு எலும்பு நகர்வு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாகவே அவருக்கு வலி அதிகமாகி இருக்கிறது.
தோள்பட்டை நகர்வு சற்று அதிகமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று முடிந்த பின்னர் இது குறித்து பேசுவோம். அதன் பின்னர்தான் அவர் வருவாரா ? மாட்டாரா ? என்ற தகவல் வெளியாகும். டெல்லி அணியில் ஏற்கனவே ரிஷப் பந்த், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா போன்ற முக்கியமான வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.