5 பேட்ஸ்மேன்களுடன் விளையாடி இந்த போட்டியில் தோற்றாலும் இந்த விஷயம் பெருமையா இருக்கு – தவான் பேட்டி

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி 28ஆம் தேதி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய ஏற்கனவே க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவருடன் சேர்த்து 8 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு அறிமுக வீரர்கள் களம் இறங்கி விளையாடினர்.

INDvsSl-1

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார். மற்றபடி ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது. தவான் அதிகபட்சமாக 40 ரன்களை குவித்தார். அதன் பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணியை அவ்வளவு எளிதாக வெற்றி இலக்கை அடைய இந்திய பவுலர்கள் விடவில்லை.

இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் பேட்ஸ்மேன் தனஞ்செயா டி சில்வா 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் தவான் தோல்வி குறித்து கூறுகையில் :

Dhawan 1

இன்றைய போட்டியில் மைதானத்தில் பந்து சற்று வந்து நின்று வந்தது. நாங்கள் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மென்கள் குறைவாக விளையாடுவதால் முதல் இன்னிங்சில் சிறப்பாக அணியை கட்டமைத்து விளையாட நினைத்தோம். அதன்படியே விளையாடினாலும் இடையில் சில விக்கெட்டுகள் விழுந்தன. இதன் காரணமாக 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டோம். அந்த ரன்களே இந்த போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.

chahar

இருப்பினும் எங்கள் அணியின் வீரர்கள் செயல்பட்ட விதம் எனக்கு திருப்தி அளிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை வெற்றிக்காக போராடினர். இளம் வீரர்களின் இந்த செயல்பாடு என்னை பெருமை அடைய வைக்கிறது. ஏனெனில் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டுசென்று தோற்றத்தில் எங்களுக்கு பெருமை தான் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement