GT vs PBKS : இப்படி ஆடுனா கண்டிப்பா எந்த டீமா இருந்தாலும் தோக்க வேண்டியதுதான் – ஷிகர் தவான் வருத்தம்

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியானது நேற்று மொஹாலி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

PBKS vs GT

- Advertisement -

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் : இந்த போட்டியில் நடந்த ஒரு விஷயத்தை நாங்கள் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும்போது நிறைய ரன்களை குவிக்க வேண்டியது அவசியம்.

ஆனால் நாங்கள் போதுமான அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதிலும் குறிப்பாக எங்களது அணி விளையாடிய டாட் பால் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகம். ஒரு அணி ஒரு போட்டியில் 56 டாட் பால்களை விளையாடினால் நிச்சயம் முடிவு எந்த ஒரு அணிக்காக இருந்தாலும் தோல்வியாக தான் இருக்கும்.

- Advertisement -

துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நாங்கள் நிதானமாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்திருக்க வேண்டும். அதே வகையில் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க : IPL 2023 : இன்னும் 6 – 8 மாசத்துல கண்டிப்பா அவர் இந்தியாவுக்காக விளையாடுவாரு – இளம் மும்பை வீரரை பாராட்டும் ரவி சாஸ்திரி

ஏனெனில் பெரிய இலக்கு இல்லாமல் இருந்தாலும் கூட இந்த போட்டியையம் சிறப்பாக கையாண்டு இறுதிவரை கொண்டு சென்று வெற்றிக்காக மிகச் சிறப்பாக போராடினார்கள் என்று பந்துவீச்சாளர்களை ஷிகர் தவான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement