13 வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு – ஆட்டநாயகன் தவான் நெகிழ்ச்சி

Dhawan-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

Iyer

- Advertisement -

அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடனும், 5 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஷிகார் தாவன் கூறுகையில் : 13 வருடங்கள் கழித்து இன்று முதல் சதத்தை அடித்து மிகவும் ஸ்பெஷல் ஆக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி உணர்கிறேன் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து நான் பந்துகளை சிறப்பாக அடித்து வருகிறேன். 20 முதல் 30 ரன்கள் அடிக்கும் போது அதனை நான் 50 ரன்களாக மாற்ற முடியாமல் போனது. ஆனால் இம்முறை அதிக நம்பிக்கை என்னிடம் இருந்தது.

Dhawan

அதனால் அதனை அப்படியே கொண்டு செல்ல விரும்பினேன். என்னுடைய மன நிலையும் தெளிவாக இருந்தது. இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றார்போல் எனது பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். அதன் விளைவாக இன்று நான் சதத்தை அடித்து உள்ளேன் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement