Dhawan : சதம் அடிக்காதது வருத்தமில்லை. முதல் 6 ஓவர்களில் நினைத்தை செய்துவிட்டேன் – தவான் மகிழ்ச்சி

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Dhawan 2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

Denly

பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

- Advertisement -

Dhawan

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் தவான் கூறுகையில் : இந்த போட்டியில் நான் சதம் அடித்திருந்தால் அதுவே எனது முதல் சதமாக அமைந்திருக்கும். ஆனால், அணியின் வெற்றியே முக்கியம் நான் சதம் அடிக்கவேண்டும் என்று சிங்கிள் ரன்களை தவிர்த்திருந்தால் அது அணியின் வெற்றியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆகையால் அணி வெற்றி பெற்றதே எனக்கு போதும். சதம் அடிக்காதது குறித்து எந்த வருத்தமும் எனக்கு இல்லை.

Dhawan 1

தினேஷ் கார்த்திக் கூறியது போல இந்த மைதானம் பேட்டிங் செய்ய அதிகமாக ஒத்துழைத்தது முதல் 6 ஓவர்கள் விரும்பி விளையாடினேன். அதன்பிறகு இறுதிவரை ஆடவேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடி இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றி தேடித்தந்து மகிழ்ச்சி என்று தவான் தெரிவித்தார்.

Advertisement