இவர் பேட்டிங் செய்றத பாத்துகிட்டே இருக்கலாம். அவ்ளோ சூப்பரா ஆடுறாரு – வெற்றிக்கு இவரே காரணம்

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் தவானுடன் ஜோடி சேர்ந்த சாம்சன் சிறப்பாக விளையாடி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

sky

- Advertisement -

அதன்பின்னர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 34 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என அமர்க்களப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ரன்களை குவிக்க தவான் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 164 என்ற டீசன்டான ரன் குவிப்பை எட்டியது.

அதன்பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக அசலங்கா 44 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் பந்து வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

bhuvi

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். துவக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் அடித்தால் மீண்டும் எங்களால் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்று நினைத்தோம். அதன்படி சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். அவரது விளையாட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

sky 1

இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. என் மீது இருந்த பிரசரை அவரது சில ரிஸ்க்கான ஷாட்டுகள் நீக்கிவிட்டன. அவர் தொடர்ந்து அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். அதேபோன்று பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார் என்று இந்திய அணியின் வெற்றி குறித்து ஷிகர் தவான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement