முதல் போட்டியிலேயே அசத்திட்டாரரு. இனிமே வர போட்டியில இவர் வேறலெவல்ல அசத்துவாரு – ஆட்டநாயகன் தவான் ஓபன்டாக்

- Advertisement -

ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்சிற்கும், டெல்லி கேபிட்டல்ஸ்க்கும் இடையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியை இளம் வீரரான ரிஷப் பன்ட் வழிநடத்தினார். டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஷ் அய்யர் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார். எனவே டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு சீனியர் வீரர்களான அஷ்வின், தவான், ரஹானே இவர்களில் யாரேனும் ஒருவருக்குத்தான் செல்லும் என எதிர்பார்த்திருந்த வேளையில் இளம் வீரரான ரிஷப் பன்ட்டிடம் கேப்டன்சியை ஒப்படைத்தது அணி நிர்வாகம்.

Pant

- Advertisement -

ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் அனுபவம் குறைந்த ரிஷப் பன்ட் எப்படி கேப்டன்சி செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும், விமர்ச்சனங்களும் அவரின்மேல் இருந்தது.ஆனால் அனைத்து விதமான விமர்ச்சனங்களையும் தான் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே உடைத்தெறிந்துவிட்டார் ரிஷப் பன்ட். தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தனது அணியை திறமையாக வழிநடத்தி வெற்றி பெறவைத்தார்.

டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் செய்த டெல்லி அணி சென்னையின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் எடுத்தாலும் ரெய்னா,மொயின் அலி, சாம் கரன் ஆகியோருக்கு ரன்களை வாரிவழங்கியது. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 188 ரன்கள் அடித்தது. 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி. அந்த அணியின் ஓப்பனர்களான ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கட்டுக்கே 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி வெற்றியை உறுதி செய்தது.

raina

இறுதியாக 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி அணி. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் திகழ்ந்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னர் ஆட்ட நாயகன் விருது வென்ற ஷிகர் தவான் கூறும்போது :

முதல் போட்டியிலேயே ரிஷப் பன்ட் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். வீரர்களை ஒரு அணியாக ஒருங்கினைத்து அவர்களை சிறப்பாகவும் வழிநடத்தினார். போட்டி முழுவதும் வீரர்களுடன் பேசிக்கொண்டும் அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்ததும் ஒரு கேப்டனாக தன் பொறுப்பை உணர்ந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இதுதான் அவர் கேப்டனாக செயல்படும் முதல்போட்டி இனி வரும் காலங்களில் கேப்டனாக அவர் சிறந்து செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement