நாளைய 3 ஆவது போட்டியில் தவான் சிறப்பாக விளையாடி ஆகவேண்டும் – இல்லனா அவ்ளோதான்

Dhawan

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

iyer

இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்று ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளதால் இப்போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் அவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி காயமடைந்த பின்னர் தற்போது 3 டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. முறையே 1, 23, 3 என்றே ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியிலும் பேட்டிங் செய்ய சற்று சிரமப்படுகிறார் என்று தோன்றுகிறது.

dhawan 1

அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு விட்டாரா அல்லது பார்ம் அவுட்டில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. எனவே நாளை போட்டியில் சிறப்பாக ஆடி வேண்டும் இல்லையென்றால் இந்திய அணியில் நிறைய இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதனால் அதனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் தொடர்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -