IND vs AUS : சதமடித்த பின் தாமதமாக கொண்டாடிய தவான் – காரணம் இதுதான்

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய

Dhawan
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

ind vs aus

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான் 109 பந்துகளுக்கு 117 ரன்கள் அடித்தார். இதன் மூலம் icc தொடர்களில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த சதத்தினை அவர் அடிக்கும் பொழுது அவர் தனது மகிழ்ச்சியை உடனடியாக கொண்டாடவில்லை அதன் காரணம் யாதெனில் 99 ரன்கள் எடுத்து இருந்தபோது ஒரு ரன்னுக்காக காத்திருந்தார். அப்போது நூறாவது ரன்னை அடிக்க முயன்ற தவான் பந்தை தட்டிவிட அந்த பந்து நேராக பீல்டரின் சென்றது.

dhawan 1

அந்த பந்து பீல்டரின் கைக்கு சென்றாலும் விரைவாக தவான் சத்தத்தை தொட வேண்டும் என நினைத்த கோலி ரன் ஓட முற்பட்டார். ஆனால் அதற்குள் அந்த பந்தை பிடித்து ஸ்டம்பை நோக்கி அடிக்க அந்த பந்து ஸ்டம்பில் பட்டது இருப்பினும் பந்து ஸ்டம்பில் பட்டு தூரமாக சென்றதால் தவான் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் கோலி இதில் அவுட்டா இல்லையா என்று தெரியும் வரை தவான் தனது சதத்தை கொண்டாடாமல் பொறுமையாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Advertisement