IND vs ENG : அவர் சென்றதும் இந்திய அணி இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளது – ரசிகர்கள் வருத்தம்

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Ravi-Shastri
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி தோல்வியடைந்தது அடுத்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதில் முக்கியமான கருத்து இறுதி நேரத்தில் தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் பொறுமையாக ஆடியது மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தது போன்ற பல காரணங்கள் நேற்றைய தோல்விக்கு காரணியாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்திய ரசிகர்கள் நேற்றைய தோல்விக்கு காரணம் தவான் அணியில் இல்லாதது என்பது போல கூறி வருகின்றனர்.

Dhawan

- Advertisement -

அதன் காரணம் யாதெனில் நன்றாக விளையாடி வந்த தவான் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தில் காயம் அடைந்து வெளியேறினார். அவர் நேற்றைய போட்டியில் இருந்தால் அவருக்கும் ரோஹித்துக்கும் இடையே நல்ல பாட்னர்ஷிப் அமைந்திருக்கும் இதனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கலாம். மேலும் தவானுக்கு பதிலாக துவக்க வீரராக ஆடும் ராகுல் தொடர்ந்து சோபிக்க தவறிவருகிறார். மேலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுவதால் மிடில் ஆர்டரில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலை வலி உண்டாகி உள்ளது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

Rohith

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement