ஐ.பி.எல் ல இருந்து நீக்கப்பட்ட இந்த ரூல்ஸ்சால் தான் தவான் நேத்து தப்பிச்சாரு – இதை கவனிச்சீர்களா ?

Dhawan

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இன் 13வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 137 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சேஸங்கின்போது 45 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றிபெற பெரிதும் உதவினார் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான்.

dhawan

ஆனால் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்ட விதிமுறை காரணமாகவே தவான் இந்த போட்டியில் அவுட் ஆகாமல் தப்பித்துள்ளார். சேஸிங்கின்போது முதல் ஓவரின் ஆறாவது பந்தை ஷிகர் தவான் அடிக்க அதை அற்புதமாக கேட்ச் பிடித்திருப்பார் மும்பை அணி வீரரான ஹர்திக் பாண்டியா. அந்த கேட்ச்சை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதா என்பதில் கள நடுவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. ஷிகர் தவானும் களத்தை விட்டு வெளியேறவில்லை. இதனால் பந்து தரையில் பட்டதா இல்லையா என்பதை பார்க்க மூன்றாவது நடுவரை அணுகினார் கள நடுவர்.

அப்படி மூன்றாவது நடுவரை அணுகும்போது கள நடுவரால் “சாஃப்ட் சிக்னல்” வழங்கப்படும். இந்த சாஃப்ட் சிக்னல் பெரும்பாலும் அவுட் என்றே வழங்கப்படும். இந்த சாஃப்ட் சிக்னல் விதிமுறை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விதியாகும். எனவே அந்த விதிமுறையை இந்த ஐபிஎல்லில் இருந்து நீக்கியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். நீக்கப்பட்ட இந்த விதிமுறை தான் நேற்றைய போட்டியில் தவானை காப்பாற்றி 45 ரன்கள் எடுக்க வைத்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தது. ஹர்திக் பாண்டியா பிடித்த அந்த கேட்சை பார்த்த மூன்றாவது நடுவருக்கும் பந்து தரையில் பட்டதா என்பது தெரியவில்லை.

pandya

கள நடுவர்களால் வழங்கப்படும் சாஃப்ட் சிக்னலும் இல்லாத காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் ஷிகர் தவானுக்கு நாட் அவுட் வழங்கினார் மூன்றாவது நடுவர். ஒருவேளை சாஃப்ட் சிக்னல் விதிமுறை இருந்து கள நடுவரால் அவுட் என்று அறிவிக்கப்பட்டு இருந்திருந்தால், தவான் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறி இருப்பார். மேலும் டெல்லி அணியின் சேஸிங்கும் மிகவும் சிக்கலானதாக மாறி இருக்கும்.

- Advertisement -

mi

நடந்த முடிந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டிருக்கும். கள நடுவர் சாஃப்ட் சிக்னலில் அவுட் என வழங்கியிருப்பார். ரீப்ளேவில் பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்திருக்கும். இருந்தாலும் கள நடுவர் அவுட் என்று அறிவித்ததால் மூன்றாவது நடுவரும் அவுட் என்ற முடிவை வழங்கி இருப்பார். அப்போது இந்த விதிமுறை பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.