6, 6, 4, 6.. 41 பந்தில் 100.. ஆஸியை நொறுக்கிய ப்ரேவிஸ்.. இளம் தெ.ஆ சூப்பர்ஸ்டாராக 2 வரலாற்று சாதனை

Dewald Brevis
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி டார்வின் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் 18, ரியான் ரிக்கல்டன் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த தேவால்ட் பிரேவிஸ் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். எதிர்ப்புறம் டிரே பிரிட்டோரியஸ் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

ப்ரேவிஸ் மிரட்டல்:

இந்த பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ப்ரேவிஸ் 25 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடிக்க அசத்தினார். மறுபுறம் வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சிக்கு 31 (22) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் மறுபக்கம் தொடர்ந்து மிரட்டிய ப்ரேவிஸ் ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் மேக்ஸ்வெல் வீசிய 12வது ஓவரில் 6, 6, 4, 6, 1 என அடுத்த அடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 23 ரன்களை விளாசினார்.

தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 41 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக டேவிட் மில்லருக்கு (35 பந்துகள்) அடுத்து 2வது வேகமான சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அத்துடன் தென்னாப்பிரிக்க அணிக்காக இளம் (21 வருடம் 105 நாட்கள்) வயதில் டி20 சதத்தை அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:

இதற்கு முன் ரிச்சர்ட் லெவி 2012ஆம் ஆண்டு ஹமில்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 24 வருடம் 36 நாட்களில் தென்னாப்பிரிக்காவுக்காக சதமடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் எதிர்ப்புறம் வந்த ராசி வேன் டெர் டுஷன் 5, கோர்பின் போஸ்க் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிரேவிஸ் 12 பவுண்டரி 8 ஃசிக்ஸருடன் 125* (56) ரன்கள் விளாசி ஃபினிசிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: வேற வழியில்ல இதுக்காக அஸ்வினை சிஎஸ்கே கழற்றி விட்டாகனும்.. சாம்சன் வந்தா குழப்பமாகும்.. பத்ரிநாத் பேட்டி

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்த அவர் தென்னாப்பிரிக்காவின் இளம் சூப்பர்ஸ்டாராக அசத்தியுள்ளார். அவருடைய சிறந்த ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 218/7 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பென் ட்வார்சுய்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

Advertisement