- Advertisement -
ஐ.பி.எல்

ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. அதைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.. கொல்கத்தாவை சாய்க்க இதை செஞ்சேன்.. ப்ரேவிஸ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்யாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி தங்களுடைய 3வது வெற்றியைப் பெற்றது. மே 7ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா தங்களுக்கு சொந்த மண்ணில் 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 38*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் துரத்திய சென்னைக்கு உர்வில் படேல் அடித்து நொறுக்கி 31 (11) ரன்கள் எடுத்தார். ஆனால் ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 60/5 என சரிந்த சென்னை மீண்டும் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கடவுளுக்கு நன்றி:

ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ் 52 (25) ரன்கள் விளாசி திருப்பு முனையை உண்டாக்கினார். குறிப்பாக வைபவ் ஆராரோ வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30 ரன்கள் தெறிக்க விட்ட அவர் போட்டியை தலைகீழாக மாற்றினார். அதை வீணடிக்காமல் சிவம் துபே 45*, தோனி 17*, கம்போஜ் 4* ரன்களை அடித்து கடைசி ஓவரில் சென்னைக்கு 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

கொல்கத்தாவுக்கு வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கான திறமையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் ப்ரேவிஸ் கொல்கத்தாவில் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் வேற லெவலில் ஆதரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தமது பேட்டிங் திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரசிகர்கள் வேற லெவல்:

“நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய எனக்கு இதைச் செய்வதற்கான திறமையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. எனது இன்னிங்ஸ் சுவாரசியமானது. ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்ததால் என்னை வேகமாக சூழ்நிலைக்குள் உட்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. திட்டம் என்னவெனில் முடிந்தளவுக்கு வேகமாக சூழ்நிலைகளை கணக்கிட்டு பின்னர் அதிரடியாக விளையாடச் செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: என் பாசமான ரசிகர்களுக்காக 2026இல் விளையாடுவேனா தெரியல.. 43 வயதில் அதை பாக்கனும்.. தோனி பேட்டி

“அதற்கு களத்தில் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறானோ அவ்வளவு சுலபமாக எனது வழியைக் கண்டறிய முடியும். எனக்கு நானே உண்மையுடன் இருக்க விரும்பினேன். இதே போல என்னால் நீண்ட நேரம் விளையாட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். ஐபிஎல் தொடரில் விளையாடுவது அபாரமானது. இங்குள்ள ரசிகர்கள் நம்ப முடியாதவர்கள். இந்த சிறந்த கிரிக்கெட்டில் நிறைய வேடிக்கை இருக்கிறது. உச்சகட்ட அழுத்தத்தில் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அதுவே எனக்குப் பசியை கொடுக்கிறது. சில வாரங்கள் பெஞ்சில் அமர்ந்திருந்த நான் களத்திற்கு சென்று விளையாட விரும்பினேன். செயல்முறைகளை நம்பினேன். கடவுளின் திட்டத்தால் இங்கே இருப்பதற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -