- Advertisement -
உலக கிரிக்கெட்

விராட் கோலியின் மகத்தான சாதனையை 3 போட்டியில் முறியடித்த பேபி ஏ.பி.டி – விவரம் இதோ

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகித்தது. அதற்கடுத்து இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்று முடித்தது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த டேவால்டு பிரேவிஸ் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவால்டு பிரேவிஸ் 53 ரன்களையும், வேண்டர் டுஷன் 38 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 62 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 54 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக விளையாடிய டேவால்டு பிரேவிஸ் 26 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த 6 சிக்ஸர்களின் மூலம் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக விராட் கோலி 10 போட்டிகளில் விளையாடி 12 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருந்தார். அவரது இந்த சாதனையை பிரேவிஸ் வெறும் 3 போட்டியில் முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : ரிங்கு, ஜெய்ஸ்வால் இல்லை.. தனது ஆசிய கோப்பை 2025 இந்திய அணியை தேர்ந்தெடுத்த ஃகைப் பேட்டி

அதாவது இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 14 சிக்ஸர்களை விளாசிய அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பிரேவிஸ் 14 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரி என 180 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -