சாதனையுடன் ஆட்டநாயகன் விருது வெல்ல தல தோனி தான் காரணம் – கான்வே வெளிப்படை பேச்சு, எதற்குன்னு பாருங்க

MS Dhoni Devon Conway
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 8-ஆம் தேதி நடைபெற்ற 55-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் ருத்ராஜ் 41 (33) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சிவம் துபே தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 32 (19) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs DC

- Advertisement -

மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த கான்வே சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 87 (49) ரன்கள் எடுத்து அவுட்டானர். கடைசியில் ராயுடு 5 (6), மொய்ன் அலி 9 (4), உத்தப்பா 0 (1) ஆஅகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 21* (8) ரன்களை எடுத்த கேப்டன் எம்எஸ் தோனி அதிரடி பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 208/6 ரன்கள் சேர்த்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

சென்னை மாஸ்:
அதை தொடர்ந்து 209 என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லிக்கு கேஎஸ் பரத் 8 (5) டேவிட் வார்னர் 19 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 25 (20) கேப்டன் ரிஷப் பண்ட் 21 (11) ஆகியோர் அதிரடி காட்டினாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி சென்றனர். அதனால் 81/5 என திணறிய அந்த அணியை ரோவ்மன் போவல் 3 (9) அக்சர் படேல் 1 (3) போன்ற முக்கிய வீரர்களும் சென்னையின் அபார பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் தோல்வி உறுதியானது.

DC vs CSK

இறுதி வரை 17.4 ஓவர்களில் 117 ஆல் அவுட்டான டெல்லி முக்கிய போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது. சென்னை சார்பில் மொய்ன் அலி 3 விக்கெட்கள், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், ட்வயன் ப்ராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த சென்னை இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

கலக்கல் கான்வே:
அதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் கொல்கத்தாவை முந்தி முதல் முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. தற்போதைய நிலைமையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம் என்றாலும் இந்த மிகப்பெரிய வெற்றி சென்னை அணி வீரர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே 87 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

MS Dhoni Devon Conway

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஜடேஜா தலைமையில் வாய்ப்பு பெற்ற அவர் 1 ரன்னில் அவுட்டான பின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதன்பின் இடையில் தனது திருமணத்திற்காக தென்னாபிரிக்கா சென்று மீண்டும் சென்னை அணியுடன் இணைந்து அவருக்கு தோனி கேப்டனாக திரும்பிய முதல் போட்டியிலேயே தொடக்க வீரராக களமிறக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

அந்த முதல் போட்டியிலேயே ருத்ராஜ் உடன் 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த சென்னை ஜோடி என்ற சாதனை படைத்த அவர் 2-வது போட்டியிலும் 54 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நேற்றைய போட்டியில் 110 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையின் புதிய நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார்.

சாதனைக்கு பெருமை தோனி:
மேலும் 85*, 56, 87 என கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதங்கள் அடித்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த சென்னை பேட்ஸ்மேன் என்ற பெருமையை டுப்லஸ்ஸிஸ் (2018) ருதுராஜ் (2020) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். மேலும் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் சென்னைக்காக முதல் 4 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. டேவோன் கான்வே : 221*
2. மேத்தியூ ஹெய்டன் : 189
3. மைக் ஹசி : 182
4. எம்எஸ் தோனி : 140

இப்படி ஆரம்பத்தில் தடுமாறிய தாம் நேற்று சிறப்பாக பேட்டிங் செய்ய தோனி தான் உதவினார் என்றும் முதல் ஆட்ட நாயகன் விருது வென்ற பெருமை அவரையே சேரும் என்றும் போட்டி முடிந்தபின் கான்வே வெளிப்படையாக பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் உடன் மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சி. அவர் அதிரடியாக விளையாடி எனது வேலையை எளிதாக்கினார். நான் இந்த பாராட்டுக்களை தோனிக்கு கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த போட்டியில் ஸ்பின்னர்ஸ்க்கு எதிராக நிறைய ஸ்வீப் ஷாட் ஆட முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக அவுட்டானேன். ஆனால் இன்றைய போட்டிக்குமுன் தோனி என்னிடம் “அவர்கள் (டெல்லி பவுலர்கள்) உங்களுக்கு புல் லென்த் பந்துகளை அதிகமாக வீசுவார்கள் என நினைக்கிறேன். எனவே இறங்கி வந்து நேராக அதிரடியாக அடிக்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறியது மிகவும் உதவியாக இருந்தது” என்று பேசினார்.

Advertisement