நான் பணத்தாசை பிடித்தவனா ? தெ.ஆ நிர்வாகத்தை அணுகவும் இல்லை. நிபந்தனையும் வைக்கவில்லை – டிவில்லியர்ஸ்

ABD
- Advertisement -

உலகக் கோப்பைக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் எப்பொழுதும் ராசியே கிடையாது என்று பேச்சு எப்போதும் உண்டு. அதனை நிரூபிக்கும் விதமாக இந்த உலக கோப்பை தொடரிலும் தென்னாபிரிக்க அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

rsa

இந்நிலையில் தொடரின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்விகளால் துவண்டு கிடந்த போது அந்நாட்டு ரசிகர்கள் பலரும் ஏபி டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று தேசிய அணிக்காக விளையாட வேண்டும். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அவரை அணுக வேண்டும். என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

- Advertisement -

அதேபோல உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க நிர்வாகத்தை சந்தித்ததாகவும், மேலும் உலக கோப்பையில் கிரிக்கெட் விளையாட நிபந்தனை இட்டு மீண்டும் விளையாட ஆசைப்படுவதாகவும் அதனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததாகவும் பல செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

south-africa-ab-de-villiers

இதற்கு முதன் முறையாக டிவில்லியர்ஸ் மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலகக்கோப்பை முடிந்து விட்டது. இந்த தொடரில் என் மீது ஏற்பட்ட சர்ச்சைகள் அனைத்தும் நியாயமற்றது. நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். 2018 ஆம் ஆண்டு மே மாதம் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். அதற்கு காரணம் பணிச்சுமை காரணமாக எனது மனைவி மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிடும் எண்ணம் இருந்ததாலே ஓய்வு எடுத்தேன்.

- Advertisement -

abd1

இது தவிர மீண்டும் நான் சென்று தென்னாபிரிக்க அணி நிர்வாகத்திடம் எந்த கோரிக்கையும் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. மேலும் என்னை சிலர் பணத்துக்காக விளையாடுகிறார் தேசத்திற்காக விளையாட மாட்டார் என்றும் விமர்சித்து கூறி வருகின்றனர். இந்த விமர்சனங்கள் அனைத்தும் நியாயமற்றது.

ABD-1

நான் சுயநலவாதி அல்லது திமிர் பிடித்தவன் கிடையாது. உண்மையான காரணங்களுக்காகவே நான் ஓய்வினை அறிவித்தேன். இப்போதும் ஒரு சில டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும். நோ ப்ராப்ளம் எனக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement