நான் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவது இதுக்காகத்தான்..! டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஐபில் தொடங்கி 10 சீசன் கள் முடிந்து தற்போது 11 வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஐபில் தொடரின் முக்கிய நோக்கமே இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது தான்.

abd

ஐபில் விளையாடும் பல இந்திய இளைஞ்சர்கள் தங்களது இலக்கே இந்திய அணியில் இடம் பெறுவது தான் என்ற குறிகோளுடன் ஆடி வருகின்றனர். ஆனால் இந்த போட்டிகளில் ஆடி வரும் வெளிநாட்டு வீரர் டி வில்லியர்ஸ் தாம் பணத்திற்காக தான் இந்த தொடரில் ஆடி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய இளம் வீரர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ஏலம் எடுக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலிலும் விளையாடி வருகின்றனர். அப்படி பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் .

சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர் “உண்மையாகவே நான் ஐபில் லில் ஆடுவதற்கு முக்கிய காரணம் இதிலிருந்து வரும் பணத்திற்காக தான்,இதன் மூலம் எனது குடும்பத்தில் உள்ள நிதி நெருக்கடி ஓரளவிற்கு குறிக்கிறது,மேலும் நான் மட்டுமல்ல பல்வேறு வீரார்களும் தங்களுக்கு உள்ள நிதி நெருக்கடி காரணமாக தான் இந்த தொடரில் விளைய்டி வருகின்றனர் , ” என்று டிவில்லியர்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

AB-de-Villiers-Royal-Challengers-Bangalore

ஏ பி டிவில்லியர்ஸ் ஒரு அதிரடி பேட்ஸ்மேன என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் அவரது அதிரடியான ஆடத்தயும் தாண்டி அவர் செய்யும் பீலடிங்கும் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிறப்பம்சம். இதனால் தான் அவரை பெங்களூரு அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.என்னதான் பணத்திற்கு காக மட்டும் தான் நான் ஆடுகிறேன் என்று ஒப்புக் கொண்டாலும் இந்த வயதிலும் அவரின் ஆட்டத்தின் திறன் இன்னமும் குறையாமல்தான் இருக்கிறது.