இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தேவ்தட் படிக்கல் ஐ.பி.எல் தொடரில் செய்த மிகப்பெரிய சாதனை – விவரம் இதோ

Padikkal 3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியில் இடம்பெறாமல் ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஒரு சாதனைகள் தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார். அதிலும் குறிப்பிடும் படியாக அவர் செய்த சாதனை யாதெனில் அறிமுக தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் எடுத்து அதிக ரன்களைக் குவித்த அறிமுக வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளா.ர் இந்த சீசனில் மட்டும் 15 போட்டிகளில் பங்கேற்றுள்ள தேவதைகள் 473 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாமல் அதிக ரன்களை அடித்த இளம் வீரராக அவர் இந்த சீசனில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு ஒரு நீண்டகால துவக்க வீரர் கிடைத்துள்ளதாகவும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement