செஞ்சுரி அடிக்குறத பத்தி நான் யோசிக்கல. என்னோட யோசனை எல்லாம் இதைப்பத்தி மட்டும் தான் – படிக்கல் பேட்டி

padikkal

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

padikkal

ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் மிடில் ஆர்டரில் வந்த ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் தேவாத்தியா ஆகிய சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி ஒரு டீசன்டான இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயம் செய்து. அதனை தொடர்ந்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரரான தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராத் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது 4 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

padikkal 1

இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற படிக்கல் பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டி எனக்கு மிக சிறப்பான ஒன்று. கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நான் மீண்டும் இங்கு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அணிக்கு திரும்பிய போட்டியில் என்னால் வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமான ஒன்று. அந்த வகையில் சரியான துவக்கம் கிடைக்க வேண்டுமென்றும் பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டும் என்றும் நினைத்து விளையாடினேன்.

- Advertisement -

Padikkal

அதன்படி நாங்கள் இருவரும் சிறப்பாக விளையாடியதால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்தது மேலும் நான் சதம் அடிப்பது பற்றி யோசிக்கவில்லை விராத் கோலியிடம் சென்று நீங்கள் போட்டியை முடித்து விடுங்கள் என்று கூறினேன். எப்பொழுதும் நான் சதம் அடிப்பது பற்றி யோசிப்பது கிடையாது. சதம் அடிப்பதை விட அணியின் வெற்றிக்கு பங்களிப்பு என் தர வேண்டும் என்பதே எனக்கு முக்கியம் .அந்த வகையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஸ்ட்ரைக் ரேட்டேஷன் செய்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.