
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், துணைக்கேப்டனுமான சுப்மன் கில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேட்ச் பிடிக்கையில் கட்டை விரல் பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்படி செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் எலும்பு முறிவாக மாறியிருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியை அவர் தவற விடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இவ்வேளையில் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக இந்திய ஏ அணியில் இடம்பெற்று விளையாடியிருந்த தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலிய நாட்டிலேயே தங்க வைக்கப்பட்டு முதன்மை இந்திய அணியுடன் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் கட்டை விரல் எலும்பு முறிவு காயம் காரணமாக வெளியேறிய சுப்மன் கில்லுக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம் பெறுவார்கள்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்த வேளையில் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் தான் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடப்போகிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் இந்த ஆண்டு இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஒரு இன்னிங்ஸ்களில் 65 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். மேலும் இந்திய ஏ அணி சார்பாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : கவுதம் கம்பீரின் ஆதரவால் அவரது செல்லப்பிள்ளைக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட். என்ன நடந்தது? – விவரம் இதோ
இதன்காரணமாகவே அவருக்கு சாய் சுதர்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை தாண்டி இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் மீதமுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் கில் விளையாடுவார் என்பதனால் இந்த ஒரு வாய்ப்பு அவருக்கு மிகவும் முக்கியமான வாய்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.