இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் பெர்த் நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்திய அணிக்காக அறிமுகமாகும் இளம்வீரர் :
ஆனால் ஏற்கனவே இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதாலும், முன்னணி வீரர்களான சுப்மன் கில், கே.எல் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளாலும் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணி எப்படி இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முக்கிய மாற்றமாக இந்திய அணிக்காக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ராணா அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இப்படி அவரது பந்துவீச்சு இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரை கவர்ந்திருந்ததால் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள கம்பீர் தொடர்ச்சியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு இடம் கொடுத்து வருகிறார்.
இருந்தாலும் டி20, ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகாத அவருக்கு தற்போது ஆஸ்திரேலியா தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக கம்பீர் இடம் பெற்றிருந்தபோது அவரது செல்லப் பிள்ளையாக தொடர்ச்சியாக வாய்ப்பினை பெற்று வந்த ஹர்ஷித் ராணா தற்போது இந்திய அணிக்காகவும் அறிமுகமாக இருக்கிறார்.
இதையும் படிங்க : நானாக இருந்தாலும் இதைத்தான் பண்ணியிருப்பேன்.. ரோஹித் பண்ணது தப்பே இல்ல – மைக்கல் கிளார்க் ஆதரவு
உள்ளூர் போட்டியிலோ அல்லது முதல்தர போட்டிகளிலேயோ பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லாத அவரை இப்படி நேரடியாக இந்திய அணிக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதால் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



