இவரைப்போன்ற பவுலரை நான் பார்த்ததே கிடையாது. இவரின் பவுலிங்கை எதிர்கொள்வது ரொம்ப கஷ்டம் – படிக்கல் ஓபன் டாக்

padikkal

நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடினார்கள். வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், முருகன் அஸ்வின், வருன் சக்ரவர்த்தி, ரியான் பராக் போன்ற பல வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் இந்தாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Padikkal 3

பெங்களூரு அணிக்காக விளையாடி இந்த வருடம் 15 போட்டிகளில் 473 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் பல சாதனைகளையும் படைத்துவிட்டார். மேலும் வெகு சீக்கிரத்தில் இந்திய அணிக்காக ஆடப் போவதாக அவர் தெரிவித்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இவர் தான் இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங் என்ற பெயரும் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த கடினமான பவுலர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வேகப்பந்து வீச்சாளர்கள் என்னை பெரிதாக இந்த தொடரில் துன்புறுத்தவில்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ளூர் தொடர்களில் நான் விளையாடும் போதும் அதே அளவிற்கு வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்து உள்ளேன்.

அதனால் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் எனக்கு ஒரு பிரச்சனையும் கொடுக்கவில்லை. இந்த வருட ஐபிஎல் தொடரில் நான் சந்தித்த மிகவும் சவாலான பவுலர் என்றால் அது ரசித்கான் தான் ஏனெனில் அவர் பந்தை இருபுறமும் திருப்புகிறார். அதுமட்டுமின்றி எந்த வகையான ஸ்பின்னை அவர் வீசுகிறார் என்பதை கணிப்பதில் எனக்கு பிரச்சனை உள்ளது. அவர் வீசிய பந்தை ஆடும் போது எனக்கு சற்று சிரமமாகவே இருக்கிறது.

- Advertisement -

Rashid

இது போன்ற பந்து வீச்சாளரை இதற்கு முன்னர் நான் ஆடியதே கிடையாது. அதனால் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் அவ்வளவுதான் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதைத்தான் விரும்புவார்கள். நானும் அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என தேவ்தத் படிக்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.