- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருபக்கம் ரோஹித் சர்மா, இன்னொரு பக்கம் கே.எல் ராகுல்.. நடுவில் பலிகடாவாக மாறிய – தேவ்தத் படிக்கல்

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.

பரிதாப சூழ்நிலையில் தேவ்தத் படிக்கல் :

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் அவரே இந்திய அணியின் கேப்டனாகவும், துவக்க வீரராகவும் விளையாடுவார். இதன் காரணமாக கடந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் பின் வரிசைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் சுப்மன் கில் காயம் காரணமாக முதல் போட்டியை தவற விட்டதால் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அந்த இடத்தில் விளையாடினார். ஆனால் அவரது ஆட்டம் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

- Advertisement -

இதன்காரணமாக தற்போது தேவ்தத் படிக்கல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் கே.எல் ராகுல் தொடர்வார் என்றும் ஆறாவது இடத்தில் சப்பராஸ் கான் அல்லது துருவ் ஜுரேல் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : வேறு வழியின்றி 1.5 கோடி வீரரை கேப்டனாக மாற்றப்போகும் கொல்கத்தா அணி – சாம்பியன் சந்தித்த சிக்கல்

இப்படி ரோஹித் சர்மாவின் வருகையாலும், கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டம் காரணமாகவும் தேவ்தத் படிக்கல் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -