வேலைக்காகாத வீரரை தூக்கி பெங்களூரு அணி செய்ய இருக்கும் மாற்றம் – விவரம் இதோ

Rcb

ஐபிஎல் தொடரில் 12 வருடங்கள் ஆகியும் இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பெங்களூரு அணியில் ஒன்று. இதுவரை மூன்று முறை மட்டும் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல கோப்பைகளை வென்று கொடுத்தாலும் ஐபிஎல் தொடரில் தற்போது வரை இவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

rcb 2

வருடாவருடம் அணியிலுள்ள வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆனால், சரியான பலன் கிடைக்கவில்லை. இந்த வருடமும் அப்படித்தான் அந்த அணியின் துவக்க வீரர் கட்டமைப்பு முழுவதும் மாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை கடந்த 2 வருடமாக பெங்களூரு அணிக்கு முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் துவக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால் இந்த வருடம் துவக்க வீரராக விளையாடிய இரண்டு வீரர்களும் மாற்றப்படுகின்றனர்

இதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஏலத்தில் வாங்கபட்டிருக்கிறார். அதேபோல் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக கடந்த இரண்டு வருடமாக அடித்து துவம்சம் செய்து ரன்களை குவித்து வரும் தேவ்தத் படிக்கல் என்ற 20 வயது இளம் வீரர் 20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்ட்டுள்ளார்.

Finch

இவர் கடந்த 2 வருடமாக கர்நாடக மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக பெங்களூரு அணியின் துவக்க வீரர் இடத்திலிருந்தே விக்கெட் கீப்பராக இருக்கும் பார்த்தீவ் பட்டேல் நீக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

Padikkal

அப்படியே இவர் விக்கெட் கீப்பராக களமிறங்கினாலும் ஐந்தாவது அல்லது ஆறாவது இடம் தான் கிடைக்கும் எப்படிப் பார்த்தாலும் கடைசியில் இறங்கி அதிரடியாக ஆடி அனுபவமில்லாத பார்த்தீவ் பட்டேல் அணியிலிருந்து கழட்டிவிட படுவார் என்று தெரிகிறது.