சிவம் துபே அடுத்த யுவ்ராஜ் சிங் மாதிரி வருவார்னு சொன்னீங்க. ஆனா இவரே அடுத்த யுவ்ராஜ் – விவரம் இதோ

Padikkal 3
- Advertisement -

ஐபிஎல் தொடர் தற்போது துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது போட்டியில் டெல்லி அணியும், மூன்றாவது போட்டியில் விராட் கோலியின் தலைமை யிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வெற்றி, பெற்று சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக விராட் கோலியின் பெங்களூரு அணியை வெற்றி பெற்றதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது .

Warner-3

- Advertisement -

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் பிரச்சனை இருந்துகொண்டுதான் இருந்தது. மாறி மாறி அவர்களை மாற்றிவிடும் கூட அந்த அணியால் சரியாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கேஎல் ராகுல் கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் அந்த அணியில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வருடம் ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் என்ற 20 வயது கர்நாடக வீரர்களாக களமிறங்கினர். குறிப்பாக அந்த 20 வயது இளம் வீரர் வீரர்களை அனுபவம் வாய்ந்த பல பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார், நடராஜன், விஜய் சங்கர் போன்ற பந்துவீச்சாளர்களை துளியும் அச்சப்படாமல் எளிதாக அடித்து விளையாடினர்.

Padikkal 2

சற்று உயரமான வீரர் என்பதால் இவருடைய ஆட்டம் பார்ப்பதற்கு யுவராஜ் சிங்கின் ஆட்டம் போலவே இருந்தது. அதிரடியாக விளையாடிய இவர் 42 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இது தான் இவருக்கு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முதல் போட்டியிலேயே எந்தவித பயமும் இல்லாமல் அடித்து நொறுக்கி அதன் காரணமாக இவரை பல முன்னாள் வீரர்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

மேலும், சீக்கிரம் இவர் இந்திய அணிக்காக வாய்ப்பிருக்கிறது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசிவருகின்றனர். அதனை தாண்டி இவர்தான் அடுத்த யுவராஜ் சிங் என்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர். குறிப்பாக அவரது உயரம் மற்றும் அவரது ஆட்டம் கிட்டத்தட்ட யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை போலவே இருக்கிறது என்று கூறி அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement