அறிமுக போட்டியிலேயே சாதனையை படைத்து ஐ.பி.எல் வரலாற்றில் இடம்பிடித்த படிக்கல் – விவரம் இதோ

Padikkal 3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று சன் ரைஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே நடைபெற்றது. விராட் தலைமையிலான அணியில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏதுமில்லை துவக்க வீரர்கள் மற்றும் மாற்றப்பட்டு இருந்தார்கள் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மிகப்பெரும் மாற்றங்கள் இருந்தது.

Warner-3

யாரும் எதிர்பாராத வகையில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார்கள் இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி துவக்கம் முதலே நன்றாக ஆடியது அந்த அணியின் இளம் வீரர் 20 வயது தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

துவக்கம் முதலே புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன் போன்ற திறமையான பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி தொடங்கினார். அதிரடியாக விளையாடி அவர் தனது முதல் போட்டியிலேயே அச்சமின்றி அரைசதம் அடித்தார். 42 பந்துகளில் 56 ரன்கள் அடித்து விட்டு தனது விக்கெட்டை இழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

Padikkal 2

இந்த அரைசதத்தின் மூலம் கடந்த 10 வருடங்களில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார் தேவ்தத்.படிக்கல். அதாவது கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு வீரரும் தனது முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்ததில்லை. தற்போது அந்த சாதனையை தன்வசம் ஆக்கியிருக்கிறார் தேவ்தத் படிக்கல். இதற்கு முன்னர் பல வீரர்கள் இப்படி அரை சதம் அடித்து இருக்கிறார்கள்.

padikkal

ஆனால் இவரைப் போன்று தனது முதல் போட்டியிலேயே இவ்வாறு அச்சமின்றி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததில்லை. இவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக வருவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement