என்னை விட நீங்க அவங்களிடம் அதிகமா சண்டை போட்டுருக்கீங்க.. மசாலாவை முடித்த கம்பீர் – கோலி பேட்டி

Virat and gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. அந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோரை பிசிசிஐ ஒன்றிணைத்துள்ளது. டெல்லியில் பிறந்து நாட்டுக்காக ஒன்றாக விளையாடிய அவர்கள் 2013 ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

அதன் பின் 2023 ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக கொஞ்சமும் மாறாமல் விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்டார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் அரை சதமடித்த விராட் கோலிக்கு கை கொடுத்த கம்பீர் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் இந்திய அணியின் பயிற்சியாளராக அவருடன் சேர்ந்து செயல்படுவேன் என்று சமீபத்தில் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மசாலாவுக்கு முடிவு:

இந்நிலையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேராக பேசிக்கொள்ளும் பேட்டிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. அதனுடைய முன்னோட்டம் தற்போது பிசிசிஐ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் 2014 அடிலெய்ட் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 2 சதமடித்தது பற்றி கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடந்த பெரிய தொடரில் நீங்கள் குவியலாக ரன்கள் குவித்தீர்கள்”

“அது உங்களை உங்கள் மண்டலத்தில் சேர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அந்த இன்னிங்ஸ் நியூசிலாந்தின் நேப்பியரில் நான் விளையாடிய பெரிய இன்னிங்ஸை எனக்கு நினைவுப்படுத்தியது. அதன் பின் அது போன்ற மண்டலத்தில் நான் என் வாழ்வில் எப்போதும் இருந்ததில்லை. அந்த மண்டலத்தில் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இப்போது உணர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

சேர்ந்த துருவங்கள்:

அதற்கு விராட் கோலி பதிளித்தது பின்வருமாறு. “நீங்கள் பேட்டிங் செய்கையில் எதிரணியுடன் பேசும் போது உங்கள் மண்டலத்தை விட்டு வெளியே சென்று அவுட்டாவதாக உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அது உங்களை இன்னும் சிறப்பாக விளையாட உட்படுத்தியதா?” என்று கேட்டார். அதற்கு கௌதம் கம்பீர் “என்னை விட நீங்கள் தான் அதிகமாக எதிரணியுடன் வாக்குவாதமும் சண்டையும் செய்துள்ளீர்கள். எனவே இந்த கேள்விக்கு என்னை விட உங்களால் சிறப்பாக பதில் சொல்ல முடியும்” என்று சொன்னதும் இருவருமே சிரித்தனர்.

இதையும் படிங்க: ஒரு செஞ்சுரி அடிச்சா போதும்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை நிகழ்த்தப்போகும் – ரோஹித் சர்மா

இறுதியில் விராட் கோலி “அது தவறு என்று சொல்ல மாட்டேன். கம்பீரும் நானும் நீண்ட தூரத்தை தாண்டி வந்துள்ளோம். இங்குள்ள அனைத்து மசாலாவுக்கும் முடிவு கட்ட இருக்கிறோம்” என்று கூறினார். இந்த உரையாடலின் முழு நீள பேட்டி விரைவில் வெளியாகும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதைப் பார்க்க ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement