ஒரு செஞ்சுரி அடிச்சா போதும்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை நிகழ்த்தப்போகும் – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதை தொடர்ந்து தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல விரும்புவதாக ஏற்கனவே அளித்திருந்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சாதனைகளை குவிக்கப்போகும் ரோஹித் :

அந்த வகையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி எளிதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி விடும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஐந்து போட்டிகளை இந்தியா சொந்த மண்ணிலும் ஐந்து போட்டிகளை ஆஸ்திரேலிய மண்ணிலும் விளையாட இருக்கிறது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இந்த போட்டியில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா படைக்கப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 சதம் அடித்திருக்கும் அவர் இந்த தொடரில் மேலும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 10 சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினால் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சேவாக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க : இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் நடைபெறும் சென்னை மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதோடு இனிவரும் தொடர்களிலெல்லாம் சிறப்பாக விளையாடி 16 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்று பெருமையையும் பெறுவார். இப்படி ஏகப்பட்ட சாதனைகளை நோக்கி தற்போது ரோகித் சர்மா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement