- Advertisement -
ஐ.பி.எல்

கோலியை போல அவமானப்படுத்த தயாரான பிசிசிஐ.. மரியாதையுடன் ஓய்வு பெற்ற ரோஹித்.. வெளியான திடுக் தகவல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக ரோஹித் சர்மா அறிவித்தார். தோனி ஓய்வு பெற்ற 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2017இல் 3 விதமான இந்திய அணிகளின் கேப்டன்ஷிப் பொறுப்புகளை ஏற்றார். அவரது தலைமையில் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா ஐசிசி கோப்பையை மட்டும் வெல்லத் தவறியது.

மறுபுறம் ரோஹித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று அசத்தியதால் விராட் கோலி இருக்கும் வரை இந்தியா கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக 2021 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர உள்ளதாக அறிவித்தார்.

- Advertisement -

கோலியை போல:

ஆனால் அப்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று பிசிசிஐ கருதியது. அதனால் விராட் கோலியிடமிருந்த ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை வலுக்கட்டாயமாக பறித்த பிசிசிஐ ரோகித்திடம் ஒப்படைத்தது. அதனால் ஏற்பட்ட வேதனையில் பணிச்சுமையைக் காரணமாக காட்டியா விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பைபையும் ராஜினாமா செய்தார்.

அடுத்ததாக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் தலைமையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனைப் படைத்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அப்படியே ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது.

- Advertisement -

தயாரான பிசிசிஐ:

மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்விக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது முக்கிய காரணமானது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பேட்டிங்கில் ஒரு அரை சதத்தை கூட அடிக்காத அவர் கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார்.

மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா முதல் போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதனால் 2025 ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் 37 வயதாகும் ரோஹித்தை கழற்றி விட்டு பும்ராவை கேப்டனாகவும், சுப்மன் கில்லை துணைக் கேப்டனாகவும் நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. அந்த சூழ்நிலையில் மே 7ஆம் தேதி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ஸ்போர்ட்ஸ் எனும் இணையத்தில் மாலை 6 மணியளவில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: திடீரென ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? பின்னால் இருக்கும் 2 காரணங்கள் – விவரம் இதோ

அடுத்த ஒரு மணி நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு பெறுவதாக ரோஹித் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதிலிருந்து டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கி விராட் கோலியை போல ரோஹித்தையும் அவமானப்படுத்த பிசிசிஐ தயாரானது. ஆனால் அதற்கு முன் மரியாதையுடன் ஓய்வு பெற்ற ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -