திடீரென ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? பின்னால் இருக்கும் 2 காரணங்கள் – விவரம் இதோ

Rohit Test
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் தேதியான்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னால் இருக்கும் 2 காரணங்கள் :

மேலும் இந்திய அணியின் சக்ஸஸ்புல் கேப்டனாக டி20 உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.

- Advertisement -

மேலும் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர் இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அந்த இரண்டு காரணங்கள் யாதெனில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கும்.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு காரணம் யாதெனில் : தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – ரசிகர்கள் சோகம்

ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement