KKR vs DC : அறிமுக போட்டியின் முதல் பந்திலே அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த கொல்கத்தா வீரர்

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Denly
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் பந்தினை சந்தித்த டென்லி தனது அறிமுக போட்டியின் முதல் பந்திலே இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தனது அறிமுக போட்டியிலே அதுவும் முதல் பந்திலே டக் ஆகி மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

33 வயதாகும் டென்லி அதிகவயதில் அறிமுகமான வீரர் மற்றும் அறிமுக போட்டியின் முதல் பந்திலே ஆட்டமிழந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் க்றிஸ் லின் மற்றும் சுனில் நரைன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement