மும்பையை தொடர்ந்து டெல்லி அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு. ஐ.பி.எல் தொடருக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

CskvsMi
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும் தற்போது இந்தியாவின் விட்டுவைக்காத வைரஸ் 75 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கொரோனா வைரசினால் இந்தியாவில் ஒருவர் பலி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மீதம் இரண்டு போட்டிகளுக்கு ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவலும் எழுந்துள்ளன.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநில அரசு மும்பையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தடை செய்தது. அதே போல சென்னையிலும் டிக்கெட் விற்பனையை நிறுத்துமாறு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

mumbai

இந்நிலையில் தற்போது டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் நடத்த டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளை டெல்லியில் நடக்க விட முடியாது என்றும் தடை விதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளின் போது சுவாரசியம் மிகுதியால் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகை புரிவார்கள்.

- Advertisement -

அவ்வாறு ரசிகர்கள் அதிக அளவில் ஒரு இடத்தில் இருக்கும்போது கொரோனா வைரஸின் பாதிப்பு ஏற்பட அதிகமாக வாய்ப்பு இருக்கும் என்ற காரணத்தினாலே மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அரசு எடுத்துள்ள இதே முடிவினை கர்நாடக அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வருட தொடர் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement