டெல்லிங் அணியின் வெற்றி நடை தொடருமா ? முக்கிய வீரர்களுக்கு மீண்டும் இடமில்லை – பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதவிருக்கின்றன. இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி அணி சென்னை அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை, 18.4 ஓவர்களிலியே அசால்ட்டாக அடித்தது. டெல்லி அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் ஆர்டர் என இரண்டுமே சம பலத்துடன் காணப்படுகிறது.

Pant

- Advertisement -

கடந்த போட்டியில் தவான் மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் 138 ரன்கள் என்ற அற்புதமான பார்ட்னர் ஷிப்பை அமைத்து, கிட்டத்தட்ட மேட்சையே முடித்து விட்டனர் . அதனால் மற்ற வீரர்களுக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே டெல்லி அணியானது கடந்த போட்டியில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன்ஸோடு இந்த போட்டியிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் சவுத் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா மற்றும் ஆன்ரிச் நோர்க்கியா இருவரும் குவாரன்டைனில் இருப்பதால் அணிக்கு திரும்ப இயலவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு எதிராக பந்து வீசிய டாம் கரன் 40 ரன்களை வாரி வழங்கினார்.

dhawan

இந்தியாவிற்க்கு எதிரான தொடரிலும் அவரின் பவுலிங் சிறப்பானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பெஞ்சில் அமரவைத்து விட்டு வேறொரு வெளிநாட்டு பவுலரை ஆட வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது டெல்லி அணி. இருந்தாலும் டெல்லி அணியின் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஷ்வினும், அமித் மிஸ்ராவும் ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும்நெருக்கடியைக் கொடுப்பார்கள்.

- Advertisement -

ஏனெனில் இவ்விருவரும் இணைந்து 46 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணிக்கு எதிராக எடுத்துள்ளனர். எக்கனாமி ரேட்டும் 7க்கு குறைவுதான். சஞ்சு சாம்சனுக்கு தலைவலியாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில் ஸ்டொய்னிசின் 12 பந்துகளை எதிர்கொண்டுள்ள சாம்சன் 18 ரன்கள் மட்டும் அடித்து இரண்டு முறை அவுட்டாகியுள்ளார்.

டெல்லி அணியின் ப்ளேயிங் லெவன்:

ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பன்ட், மார்கஸ் ஸ்டொய்னிஷ், ஷிம்ரன் ஹெட்மேயர், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், அமித் மிஸ்ரா, டாம் கரன், அவேஷ் கான்.

Advertisement